சேதமடைந்த மின்கம்பம்
நாகர்கோவில் மாநகராட்சி கீழவண்ணான்விளை ஊர் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அருேக பல வீடுகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் மின்கம்பம் சேதமடைந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரசூர பெருமாள், கீழவண்ணான்விளை.
சாலைைய சீரமைக்க வேண்டும்
ஆரல்வாய்ெமாழியில் நான்குவழிச்சாலை, மங்கம்மாள் சாலை சந்திப்பு பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் ெசய்கிறார்கள். சாலை சேதமடைந்து உள்ளதால் வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
சாலையோரம் நிற்கும் பட்ட மரம்
கண்டன்விளை அரசு பள்ளி முன்பு ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், ெபாதுமக்கள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். இந்த நிழற்குடையின் அருகே சாலையோரம் ஒரு வேப்பமரம் பட்ட நிலையில் நிற்கிறது. அந்த மரத்தின் கிளைகள் சிறிது சிறிதாக முறிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால், சாலையோரம் பஸ்சுக்காக காத்திருக்கும் ெபாதுமக்கள் மிகவும் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, கண்டன்விளை.
நடை பாதையில் ஆபத்து
நாகர்கோவில், தலைமை தபால் நிலையம் பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக ஓடையின் மேலே சிலாப் போட்டு நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிலாப் உடைந்து நடைப்பாதையில் மிகப்ெபரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக ெசல்கிறவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிகண்டன், வடசேரி.
சேதமடைந்த சாலை
வில்லுக்குறியில் இருந்து ஆசாரிபள்ளத்திற்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கிறார்கள். இங்கு கொன்னக்குழிவிளை பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அவானிஸ், கொன்னக்குழிவிளை.