அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்;
திருவையாறு:-
திருவையாறு அருகே பள்ளி அக்ரஹாரம் கும்பகோணம் ரவுண்டானா அருகில் நேற்று காலை நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்தபோது அதில் வந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் வயலூர் மேலதெருவை சேர்ந்த சரத்குமார் (வயது28) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.