நெல் கொள்முதல் நிலையமாக செயல்பட்டு வரும் வத்திராயிருப்பு பஸ் நிலையம்
நெல் கொள்முதல் நிலையமாக செயல்பட்டு வரும் வத்திராயிருப்பு பஸ் நிலையத்தை பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
நெல் கொள்முதல் நிலையமாக செயல்பட்டு வரும் வத்திராயிருப்பு பஸ் நிலையத்தை பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ்நிலையம்
வத்திராயிருப்பு பஸ்நிலையம் திறக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த பஸ்நிலையம் இன்று வரை முழுமையாக செயல்பாடு இல்லாமல் உள்ளது. ஒரு சில பஸ்கள் மட்டும் பஸ்நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மற்ற பஸ்கள் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல இங்குள்ள சாலை பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இங்குள்ள குடிநீர்தொட்டி, பாலூட்டும் தாய்மார்கள் அறை, கழிவறை ஆகியவை பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது.
நெல்கொள்முதல் நிலையம்
இந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராததால் தற்போது நெல் கொள்முதல் நிலையமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பஸ்நிலையத்திற்குள் வரும் ஒரு சில பஸ்களும் தற்போது வர முடியாத நிலை உள்ளது.
அத்துடன் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வராமல் முத்தாலம்மன் பஜாரில் திரும்பி செல்வதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வத்திராயிருப்பு பஸ்நிலையத்தில் செயல்பட்டு வரும் நெல்கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து விட்டு மீண்டும் பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.