சதுரகிரி மலைப்பகுதியில் ‘தீ’

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-27 19:04 GMT
வத்திராயிருப்பு, 
சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
காட்டுத்தீ 
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், புலி, குரங்குகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைகளும், விலை உயர்ந்த மரங்களும் அதிக அளவில் உள்ளன. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாப்டூர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. 
சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் 9, 10 சேரும் இடத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அருகே உள்ள கோட்டைமலை வனச்சரகம் பகுதியில் திடீரென நேற்று மாலை 4 மணியளவில் காட்டுத்தீப்பற்றி எரிந்தது.
நீண்ட நேரம் போராட்டம் 
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே தீப்பற்றி எரியும் வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் அப்பகுதியை விட்டு இடம்பெயர தொடங்கியது. இதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் இருந்த விலை உயர்ந்த மரங்களும் தீக்கிரையாகியது. 
இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் 16 பேர் கொண்ட குழுவினர் காட்டுத்தீ பற்றிய கோட்டைமலை வனப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் ஆகியும் சாப்டூர் பீட் நம்பர் 9,10 சரகம் மலைப்பகுதியில் எரியும் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர். 
இதுகுறித்து  வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சாப்டூர் வன சரகத்திற்கு உட்பட்ட பீட் 9,10 சதுரகிரி கோவில் அருகே உள்ள உள்ள கோட்டைமலை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சாப்டூர் வனத்துறையினர் ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான குழுவினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்