சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு
ரஷியா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாக சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
விருதுநகர்,
ரஷியா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாக சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
இறக்குமதி
இதுபற்றி சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் கூறியதாவது:-
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் பாமாயில் 8.83 மில்லியன் டன்னும், சோயா எண்ணெய் 4.5 மில்லியன் டன்னும், கடுகு எண்ணெய் 3 மில்லியன் டன்னும் பயன்படுத்தப்படுகிறது. இந்த 3 சமையல் எண்ணைகளுக்கு பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் ஆகும். இதில் 50 ஆயிரம் டன் சூரியகாந்தி எண்ணெய்தான் உள்நாட்டில் உற்பத்தியாகும். மீதமுள்ள தேவைக்கு சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் மற்றும் ரஷியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் 2.5 மில்லியன் டன்னாகவும், 2020-2021-ம் நிதியாண்டில் 2.2 மில்லியன்னாகவும் இருந்துள்ளது.
சூாியகாந்தி எண்ணெய்
இதில் உக்ரைனில் இருந்து மட்டும் 2019-2020-ம் நிதியாண்டில் 1.93 மில்லியன் டன்னும், 2020-2021-ம் நிதி ஆண்டில் 1.84 மில்லியன் டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ரஷியாவிலிருந்து 2019-2020-ம் நிதி ஆண்டில் 0.38 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2020-2021-ம் நிதியாண்டில் 0.28 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு முன்பே உலக அளவில் சூரிய காந்தி எண்ணெய் விலை உயர தொடங்கிவிட்டது.
சூரியகாந்தி எண்ணெய் விலை செலவு, காப்பீடு மற்றும் சரக்கு செலவு உள்பட ஒரு மாதத்திற்கு முன்பே டன் ஒன்றுக்கு 1,455 டாலர்களாகவும், ஒரு வருடத்திற்கு முன்பு 1,420 டாலர்களாகவும் இருந்தது. ஆனால் ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்பே கடந்த பிப்ரவரி 23-ந் தேதி இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெய் விலை டன் ஒன்றுக்கு 1,630 டாலர்களாக உயர்ந்துள்ளது.
விலை உயரும்
சூரியகாந்தி எண்ணெய் மட்டுமின்றி பாமாயில் எண்ணெய் டன் ஒன்றுக்கு 1,710 டாலர்களாகும். சோயாபீன் எண்ணெய் 1,777 டாலர்களாகவும் விலை உயர்ந்துள்ளது.
தற்போது ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலைகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் பிரச்சினை ஏற்படும் நிலையில் மற்ற சமையல் எண்ணெய் வகைகளின் விலைகளும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.