1,108 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் 1,108 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

Update: 2022-02-27 18:59 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் 1,108 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. 
போலியோ சொட்டு மருந்து 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 1,108 மையங்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் 74 நடமாடும் குழுக்கள் மூலம் ெரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விருதுநகரில் பெ.சி.மகப்பேறு மருத்துவமனையில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். 
ரோட்டரி சங்க நிர்வாகிகள் வடிவேல், காயத்ரி உள்ளிட்டோரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர். கலெக்டர் மேகநாத ரெட்டி மகப்பேறு மருத்துவமனையில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமினை ஆய்வு செய்ததுடன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
சிவகாசி 
சிவகாசி மாநகராட்சி ஜானகியம்மாள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் அசோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். 
ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் நிலையம் மற்றும் 26 பள்ளிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமினை நகர்மன்ற ஆணையாளர் மல்லிகா தொடங்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் வேலாயுதம், முருகதாசன், சந்திரன், அங்குராஜ் ஆகியோர் செய்திருந்தனர். தளவாய்புரம் பகுதியில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு  சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதனை பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி தொடங்கிவைத்தார். இதேபோல் முகவூர் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் உமாதேவி வன ராஜன், சோலைசேரி பகுதியில் பஞ்சாயத்து தலைவர் வைரமுத்து, நக்கனேரி பகுதியில் பஞ்சாயத்து தலைவர் பாக்கிய ராஜன் ஆகியோர் சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தனர்.
ஆலங்குளம் 
ஆலங்குளம், கல்லமநாயக்கர் பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், கொங்கன்குளம் ஆகிய அங்கன்வாடி மையங்களில் தாயில்பட்டி வட்டார மருத்துவர் டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் சுகாதார ஆய்வாளர் மதியரசு, மற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் அடங்கிய சுகாதார குழுவினர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கினார்கள். இதில் ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ், கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.  முகாமில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகர்நல அலுவலர் ராஜ நந்தினி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி, ஐயப்பன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், மருத்துவ அலுவலர் கோமதி, வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சை பாண்டியன் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய கவிதா, ட்விங்கிளின் ஞான பிரபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  மல்லாங்கிணறில் நடைபெற்ற முகாமினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். 
சாத்தூர் நகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்  நடைபெற்றது.  முகாமில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் வெங்கடேசன், திருப்பதி மற்றும்  செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் நகராட்சி ஆணையாளர் நித்தியா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்