குடிபோதையில் தகராறு செய்த டிரைவர் தலையில் கல்லைப் போட்டு கொலை

குடிபோதையில் தகராறு செய்த டிரைவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தந்தை சரண் அடைந்தார்.

Update: 2022-02-27 18:38 GMT
மேலூர், 
 மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ராஜ மாணிக்கம் (வயது31). ஆட்டோ டிைரவர். அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால், குடிபோதையில் தினமும் ராஜமாணிக்கம், சந்திரனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 
சம்பவத்தன்றும் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், கிராம மந்தையில் உறங்கிக்கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் தலையில் கல்லை தூக்கிப்போட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு  மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.  
இதையடுத்து சந்திரன் மேலவளவு போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர் தனது மகன் ராஜ மாணிக்கத்தை தான் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்