1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-27 18:37 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திராநகர் சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது ராமநாதபுரம் மேலக்கோட்டை 5-வது தெருவை சேர்ந்த முகம்மது முபாரக் மகன் முகம்மது கனி (வயது22) என்பது தெரிய வந்தது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்