போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து போட்டி
பரமக்குடியில் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து போட்டி நடந்தது.;
பரமக்குடி,
பரமக்குடி உட்கோட்ட காவல்துறை சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து போட்டி பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியை பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை தொடங்கி வைத்தார். ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவில் நடைபெற்ற போட்டியில் பரமக்குடி ஆர்.எஸ். கைப்பந்தாட்ட ஆண்கள் அணியும், பரமக்குடி காவல்துறை அணியும் மோதின. இதில் ஆர்.எஸ். கால்பந்தாட்ட அணி முதலிடத்தை பெற்றது. காவல்துறை அணி இரண்டாம் இடத்தை பெற்றது. அதேபோல் பெண்கள் இறுதிப்போட்டியில் ஆர்.எஸ். பெண்கள் அணியும், பெண் போலீசார் அணியும் மோதின. இதில் ஆர்.எஸ். பெண்கள் அணியும் முதலிடத்தையும், பெண் போலீசார் அணி 2-வது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு ஜெயசிங் சுழற்கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், சரவண சுதர்சன், தினகரன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முகமது, பெரியார், இளவரசு, சுதா, பேராசிரியர்கள் அம்பேத்கர், கலைச்செல்வன், நயினார்கோவில் தி.மு.க. தொ.மு.ச. நிர்வாகி அரசுமணி, கலைஞர் பாசறை வளவன் உள்பட காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.