91 மதுபாட்டில்களுடன் ஒருவர் சிக்கினார்

ராமேசுவரத்தில் 91 மதுபாட்டில்களுடன் ஒருவர் சிக்கினார்.

Update: 2022-02-27 18:21 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் திட்டக்குடி சந்திப்பு சாலை பகுதியில் நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒருவரது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த இரு சக்கர வாகனத்தில் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 91 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வாங்கி வந்தது  என தெரிய வந்தது. விசாரணையில்  காந்தி நகரைச் சேர்ந்த செல்வ களஞ்சியம் என்பவரையும் போலீசார் பிடித்து நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்