குளச்சலில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
குளச்சலில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்;
நாகர்கோவில்:
குளச்சலில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடி காமராஜர் சாலை புதுக்காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25), இவர் மீதும், குலசேகரபுரம் பொத்தையடி சாலைகுளத்தை சேர்ந்த மதுரை வீரன் (27) மற்றும் சதையா (22) ஆகியோர் மீதும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இதற்கான அனுமதி கோரி கலெக்டர் அரவிந்த்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் அரவிந்த் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அய்யப்பன் உள்ளிட்ட 3 பேர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.
---