திருப்பத்தூர் மாவட்டத்தில் 709 முகாம்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டத்தில் 709 முகாம்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 709 முகாம்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
709 முகாம்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 709 முகாம்களில் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில், தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த சொட்டு மருந்து வழங்கும் பணியில் 2,275 பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 5 சிறப்பு வாகனங்கள் மூலம் நடமாடும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை 90 மேற்பார்வை குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அனைத்து ரெயில், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகளில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 22 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.