1 லட்சத்து 13 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் முகாமை தொடங்கி வைத்தார். ராமேசுவரம், நயினார்கோவில், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
பரமக்குடி
பரமக்குடி நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம், அங்கன்வாடி மையங்கள், நகராட்சி பள்ளிகள் ஆகியவற்றில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்பு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம், சுகாதார துணை இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார்.டாக்டர் கலைச்செல்வி உள்பட நகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் போகலூர் ஒன்றியம் பொட்டிதட்டி ஊராட்சியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், போகலூர் ஒன்றிய தி.மு.க. பொருளாளர் வக்கீல் குணசேகரன் உள்பட சுகாதார பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவாடானை
திருவாடானை தாலுகாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. தொண்டி, பாண்டுகுடி, எஸ்.பி.பட்டினம், வெள்ளையபுரம், திருவெற்றியூர், மங்கலக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு உட்பட்ட 136 மையங்களில் நடைபெற்ற முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட 11 ஆயிரத்து 414 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருவாடானை ஊராட்சி அலுவலகம், பாரூர், சி.கே.மங்கலம், கல்லூர், மாங்குடி ஆகிய கிராமங்களிலும் தொண்டி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களை ராமநாதபுரம் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல் திருவாடானை வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோவில், பள்ளிவாசல், ஆலயங்கள், பஸ்நிலையம், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவல கண்ணன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையில் டாக்டர் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
1 லட்சத்து 13 ஆயிரம் குழந்தைகள்
மாவட்டம் முழுவதும் நடந்த 1,260 முகாம்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 113 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 99.6 சதவீதம் ஆகும். சொட்டுமருந்து வழங்கும் பணியில் 2,545 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
சித்தார்ேகாட்டை
சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மகேஸ்வரி சசிகுமார் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கினார். அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர் ஆர்வத்துடன் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக்ெகாண்டனர்.