தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் சிறந்த மாணவர்களாக வரலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் சிறந்த மாணவர்களாக வரலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பேசினார்.
காட்பாடி
தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் சிறந்த மாணவர்களாக வரலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பேசினார்.
சிறப்பு பயிலரங்கம்
காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வானம் வசப்படும் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பயிலரங்கில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தனனம்பிக்கை, விடாமுயற்சி
தாய் தந்தை ஆகிய இருவரும் உங்களுக்கு இரண்டு கண்கள். எனவே நீங்கள் அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். தாய் போற்ற தகுந்தவர். நீங்கள் இப்போது இளவயது மாணவர்கள். நீங்கள் செய்வது சரியா? தவறா என உங்களால் முடிவு எடுக்க முடியாது. எனவே நீங்கள் உங்களது தாய் மற்றும் தந்தை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.
உங்களது வாழ்க்கை சிறப்படைய ஆசிரியர் பாடுபடுகிறார். அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பயிற்சி அளிக்கின்றனர். இதனை உணர்ந்து சிறப்பாக கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும். தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிக சிறந்த மாணவர்களாக முன்னேறலாம். வேலூர் மாவட்டம் கல்வியில் முதன்மை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், ஊடகங்களில் வெளியான செய்திகளை காட்சிப்படுத்தி விளக்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரபிள்ளை, உதவி தலைமை ஆசிரியர் குமரன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.