2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா
மயிலாடுதுறையில் 2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி 2-ம் நாள் நிகழ்ச்சியில் சென்னை நாட்டியக்கூடம் குழுவினர், நிருத்யாலயா அகாடமி குழுவினர், மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் நுண்கலை பயிற்சியக குழுவினர், சென்னை லட்சுமி கலாகேந்தரம் குழுவினர், நிருத்யாப்யாசா அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ் குழுவினர், நாட்டியதிருத் அகாடமி ஆப் பரதநாட்டியம் ஆகிய குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-ம் நாள் மயூரநாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்ற கலைஞர்களை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கவுரவத் தலைவர் ஏ.ஆர்.சி.விஸ்வநாதன், தலைவர் பரணிதரன், அறங்காவலர் சிவாலிங்கம், உமாசிவாலிங்கம், சேம்பர் ஆப் டிரேடர்ஸ் செயலாளர் புலவர் செல்வம், சுவாமிநாத சிவாச்சாரியார், தொழிலதிபர் வெங்கட்ராஜூலு உள்ளிட்டோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். இதில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.