படிப்பில் கவனம் செலுத்தகோரி பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
படிப்பில் கவனம் செலுத்தகோரி பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர்:
படிப்பில் கவனம் செலுத்தகோரி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவி
நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் மேற்கு கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் நந்தினி (வயது 16). இவர் பொத்தனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நந்தினி படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும், படிப்பில் கவனம் செலுத்தகோரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி நேற்று காலை வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
விசாரணை
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது மின்விசிறி மாட்டும் கொக்கியில் மாணவி சேலையால் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அலறி துடித்தனர். பின்னர் மகளை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதது காண்போர் கண்களை கலங்க செய்தது. இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.