ரெயில் மோதி மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே ரெயில் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-02-27 17:27 GMT
திண்டுக்கல்: 

ஜம்முதாவியில் இருந்து நெல்லை வரை செல்லும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்     ரெயில், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே கேட் அருகே இன்று மதியம் 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரெயில் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி, தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்த பெருமயம்மாள் (வயது 66) என்று தெரியவந்தது. காது கேட்பதில் பிரச்சினை இருப்பதால், ரெயில் வரும் சத்தம் கேட்காமல் பெருமயம்மாள் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் ரெயிலில் அடிபட்டு அவர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்