தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி விழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 26-ந் தேதி சக்தி கரகம் அழைத்தல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று சக்தி கரகம் ஊர்வலமும், தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
பின்னர் கோவில் பூசாரி சக்தி கரகத்துடன் முதலில் தீ மிதித்தார். இதையடுத்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் விரதம் இருந்த பக்தர்கள், பெண்கள் தரையில் படுத்து வழிபட்டனர். அப்போது கோவில் பூசாரி சக்தி கரகத்துடன் அவர்கள் மீது நடந்து சென்று அருளாசி வழங்கினார். இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.