கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலாளி மனைவி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பெங்களூருவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (வயது 29). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அனிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் அருகே உள்ள ஈஸ்வரதாஸரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனி (38) கூலித்தொழிலாளி. இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்
ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரியை சேர்ந்தவர் சாந்தகுமார் (19). தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக மாணவர் சாந்தகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்கார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளி
மகாராஜகடை அருகே உள்ள காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ் (34). இவருக்கு கண்பார்வை இல்லை. மாற்றுத்திறனாளியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.