மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பூண்டு விலை வீழ்ச்சி
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.;
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
வெள்ளை பூண்டு ஏலம்
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு மண்டி கள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து சாகுபடி செய்யப்படும் வெள்ளை பூண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை தோறும் பூண்டு ஏலம் நடைபெறுவது வழக்கம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் வெள்ளை பூண்டு சீசன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் மேட்டுப்பாளையம் மார்க் கெட்டிற்கு 7 ஆயிரம் மூட்டை வெள்ளை பூண்டு விற்பனைக்காக கொண்டதாக கொண்டு வரப்பட்டது.
விலை குறைவு
இதனால் கிலோ ரூ.120- முதல் ரூ.170-க்கு விற்பனையானது. ஆனால் மார்க்கெட்டுக்கு நீலகிரியில் இருந்து 15 ஆயிரம் மூட்டை வெள்ளைப்பூண்டு விற்பனைக்கு வந்திருந்தது.
வரத்து அதிகரித்ததால் அதன் விலை குறைந்தது. இதனால் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனையானது. வெள்ளைப்பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயி கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
உருளைக்கிழங்கு
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 75-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நேற்றைய மார்க்கெட்டுக்கு கோலாரில் இருந்து 15 லோடு, இந்தூரில் இருந்து 20 லோடு, குஜராத்தில் இருந்து 4 லோடு, ஆக்ராவிலிருந்து 3 லோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
கோலார் உருளைக்கிழங்கு (45 கிலோ) ரூ.900 முதல் ரூ.950 வரை, இந்தூர் உருளைக்கிழங்கு ரூ.850 முதல் ரூ.900,, ஆக்ரா உருளைக் கிழங்கு ரூ.800, குஜராத் உருளைக்கிழங்கு ரூ.850 வரை விற்பனையானது.