2,337 பேர் ஊரக திறனாய்வு தேர்வு எழுதினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,337 மாணவ-மாணவிகள் ஊரக திறனாய்வு தேர்வு எழுதினர்.;

Update: 2022-02-27 16:14 GMT
திண்டுக்கல்: 

ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற வேண்டும் என்றால் மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வை 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் எழுதலாம்.

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 437 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். 

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு இன்று  நடைபெற்றது. திண்டுக்கல்லில் 2 இடங்கள், வேடசந்தூரில் 4 இடங்கள், பழனி, வத்தலக்குண்டுவில் தலா 3 இடங்கள் என மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் நடந்த இந்த தேர்வை 2 ஆயிரத்து 337 பேர் எழுதினர். 100 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் செய்திகள்