லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பிராமண தெருவில் வசித்து வந்தவர் அண்ணாதுரை (வயது 38) லாரி டிரைவர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தாா். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரர் வெங்கடேசன் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.