திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரிடம் மணிப்பர்ஸ் திருட்டு போனதால் பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் சோதனை
திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரிடம் மணிப்பர்ஸ் திருட்டு போனதால் பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் சோதனை
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் அரசு பஸ் கண்டக்டரிடம் மணிப்பர்ஸ் திருட்டு போனதால் பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணிப்பர்ஸ் திருட்டு
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் அந்த பஸ் புஷ்பா சந்திப்பை கடந்தபோது பஸ் கண்டக்டரான நம்பியூரை சேர்ந்த ரங்கசாமி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிப்பர்ஸ் திடீரென காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் டிரைவரிடம் இந்த தகவலை கூறி பஸ்சை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். புஷ்பா சந்திப்பு வரை கண்டக்டர் ரங்கசாமியின் மணிப்பர்ஸ் இருந்துள்ளது.
பைகளில் சோதனை
இதனால் புஷ்பா சந்திப்பு பஸ் நிறுத்தத்தை தாண்டிய பிறகுதான் பர்சை திருடியது தெரிய வந்தது. இதனால் அந்த பஸ்சில் புஷ்பா சந்திப்பில் ஏறிய வடமாநில இளைஞர்களிடம் பஸ் நடத்துடனர் மற்றும் டிரைவர் மணிபர்ஸ் குறித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அங்கு வந்த போலீசார் உதவியுடன் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பைகளில் சோதனை நடத்தினார்கள்.
ஆனால் கடைசிவரை ரங்கசாமியின் மணிபர்ஸ் கிடைக்கவில்லை. இதன்பின்பு சிறிது நேரம் கழித்து அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. திருட்டு போன கண்டக்டரின் மணிபர்சில் அவருடைய அடையாள அட்டை, கண்டக்டர் உரிமம் அட்டை, ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.300 இருந்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.