16 பேருக்கு கொரோனா

16 பேருக்கு கொரோனா

Update: 2022-02-27 15:59 GMT
அனுப்பர்பாளையம்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைந்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20-க்கும் குறைவாகவே உள்ளது. இதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 810-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 532-ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 226 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை 1052-ஆக உள்ளது.

மேலும் செய்திகள்