மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவர் சாவு

மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவர் சாவு

Update: 2022-02-27 15:52 GMT
மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவர் சாவு
வால்பாறை
 வால்பாறை அருகில் உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் வருண் இவர்வால்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் தனது நண்பனுடன் கெஜமுடி எஸ்டேட்டில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை வருண் ஓட்டினார்.
சாவு
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் இருவரும் சாலையோரத்தில் இருந்த காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த வருணை இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வருண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். அவரது நண்பர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்