சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து

கூத்தாநல்லூரில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-02-27 15:18 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சாைலயில் சுற்றித்திரியும் குதிரைகள்
கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள லெட்சுமாங்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை மற்றும் நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக குதிரைகள் சுற்றித்திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் சாலையில் இந்த குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்பது, சாலையின் குறுக்கே செல்வது, படுத்து கிடப்பது ஆகியவற்றால் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகனங்களும் சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது.  இரவு நேரங்களில் சாலையில் படுத்து  கிடக்கும் குதிரைகளால் வாகன ஓட்டிகளுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அப்புறப்படுத்த நடவடிக்கை 
எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---

மேலும் செய்திகள்