ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பம்புகள்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிலம் மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது மின் இணைப்பு பெற மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தற்சமயம் டீசல் என்ஜின் பம்பு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள டீசல் என்ஜின் பம்பு வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் http://application.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
புகைப்படம், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிட்டா, பட்டா, அடங்கல், பதிவேடு, புலப்பட வரைபடம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் இணைத்து அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்ய இயலாத நபர்கள் நேரடியாக தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்யலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.