உப்பளத்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-02-27 14:21 GMT
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே மதுப்பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த உப்பளத்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உப்பளத்தொழிலாளி
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது47). உப்பளத் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் செல்வராஜ் அவரது மனைவி தங்கம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தங்கம்மாள் பணம் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.  பின்பு செல்வராஜ் வீட்டில் உள்ள பணத்தை எடுத்து சென்று மது குடித்துவிட்டு வந்து மீண்டும் தங்கமாளிடம் தகராறு செய்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த தங்கம்மாள் மீண்டும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலை 
மீண்டும் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்வராஜ் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்