காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-27 13:40 GMT
ஆய்வு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் 2021-2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள், போளூர் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள், கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. க. அன்பழகன், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.எம்.வி.பி.எழிலரசன், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.பாலசுப்பிரமணியன், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.முகமது ஷாநவாஸ், மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.இராஜகுமார் மற்றும் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்துரையாடல்

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சுற்றுச்சூழல், வனத்துறை, உள்ளிட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, அதன் பயன், தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக காஞ்சீபுரம் மாநகராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் வேகவதி ஆறு, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு விழா பூங்கா, நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் பொன்னேரிக்கரை ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கீழ்கதிர்பூர் ஊராட்சியில் பட்டுப் பூங்கா, நத்தப்பேட்டை ஏரிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், சட்டப்பேரவை செயலாளர் பி.சீனிவாசன், சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஸ்ரீதேவி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்