கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-27 12:53 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நந்த கோபால புரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஒரு பையில் 1 கிலோ 60 கிராம் எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மத்திய பாகம் போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்