பழவேற்காடு அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்

பழவேற்காடு அருகே கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.

Update: 2022-02-27 11:37 GMT
பொன்னேரியை அடுத்த பழவேற்காடு மீன்பிடி பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு வைரவன் குப்பம், லைட்அவுஸ்குப்பம், கூணங்குப்பம், செம்பாசிபள்ளிகுப்பம் உட்பட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பிடிக்கும் மீன்களை பழவேற்காடு மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். இந்தநிலையில் லைட்ஹவுஸ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கூணங்குப்பம் மீனவ கிராமத்தின் கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.

மேலும் செய்திகள்