ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை)மகா சிவராத்திரி திருவிழா

விளாத்திகுளம் அருகே ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை) மகாசிவராத்திரி விழா நடக்கிறது

Update: 2022-02-27 11:26 GMT
எட்டயபுரம்:
 விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் குமாரசித்தன்பட்டி ஆனந்தவல்லி சமேத ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மகா கணபதி ஹோமம், ருத்ர பாராயணம், வேத பாராயணம், வேள்வி யாகம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மகா சிவராத்திரி பூஜை, நான்கு கால பூஜை ஆகம விதிமுறைப்படி அபிஷேக அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 6.45 மணிக்கு  திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு நமசிவாய நமோ கையெழுத்துப் போட்டியும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்