திசையன்விளை:மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு போய் இருந்தது

Update: 2022-02-27 05:23 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி அருள்நகரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 31). திசையன்விளையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்றார். அங்கு கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
கடையில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையில் இருந்த ரூ.50 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்