நெல்லை:வாலிபருக்கு கத்திக்குத்து- தந்தை கைது
வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை கைது;
நெல்லை:
மேலப்பாளையம் குருந்துடையார்புரத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 22). இவர் பாலிடெக்னிக் படித்துள்ளார். சம்பவத்தன்று மாரியப்பனுக்கும் அவருடைய தந்தை தர்மலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மாரியப்பனை தந்தை தர்மலிங்கம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியப்பன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் சாமி வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.