வீட்டின் பின்பக்க கதவை திறந்து ரூ.48 ஆயிரம் திருட்டு
வீட்டின் பின்பக்க கதவை திறந்து ரூ.48 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல்(வயது 58). இவர் தனது மனைவி சம்பூர்ணம், மகன்கள் சரவணன், கண்ணுசாமி, மருமகள்கள் சித்ரா, கவுசி ஆகியோருடன் வசித்து வருகிறார். மணிவேல் குடும்பத்தினர் பகலில் பழைய வீட்டிலும், இரவில் அருகில் கட்டப்பட்ட புதிய மாடி வீட்டிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் புதிய வீட்டில் தூங்க சென்றனர். அப்போது மர்ம நபர்கள், மணிவேலின் பழைய வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால், பூஜை அறையின் அலமாரியில் இருந்த ரூ.48 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
அதேபோல் மணிவேல் வீட்டின் அருகில் உள்ள துளசியம்மாள், லட்சுமி, ராமலிங்கம் ஆகியோரது வீட்டிலும் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம், நகை எதுவும் சிக்காததால் திரும்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குறித்து மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.