அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் ஊக்குவிக்க தேவை இல்லை

அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் ஊக்குவிக்க தேவை இல்லை.

Update: 2022-02-26 19:51 GMT
மதுரை, 
மதுரை ஐகோர்ட்டில் தாக்கலான ஒரு அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பல்வேறு நபர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளுக்கு விரைவு தபாலில் அனுப்பிவிட்டு, பதிலுக்காக காத்திருப்பதில்லை. உடனடியாக கோர்ட்டில் வழக்கு தொடருகின்றனர். அனைத்து மனுக்களின் மீதும் அதிகாரிகள் உடனடியாக உரிய முடிவை எடுக்க முடியாது. இதனால் வேறொரு காரணத்தை கூறி, மீண்டும் வழக்கு தொடர்கின்றனர்.
இதுபோன்ற வழக்குகளில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய முடிவு எடுக்கும்படி கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு மனு தாக்கல் செய்வதை ஊக்குவிக்க முடியாது. தகுதி அடிப்படையில் விசாரணை நடத்தி, குறிப்பிட்ட உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால், அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக மட்டும் அவமதிப்பு வழக்கு தொடரலாம்.
எனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் அவமதிப்பு வழக்கு தொடருவதை கோர்ட்டு பதிவுத்துறை ஊக்குவிக்க தேவையில்லை. 
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்