விவசாய நிலம் அருகே பயங்கர தீ
அருப்புக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டது.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளப்பயிர்கள் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த மக்காச்சோள காட்டுப்பகுதியின் அருகே புல்வெளிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி விவசாயிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து .தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மக்காச்சோள காட்டுப்பகுதியை சுற்றி பரவிய தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.