திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த ஆதி என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து வந்து கொண்டிருந்தார். கட்ராம்பட்டி அருகே இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதின.இதில் ஜெயராமன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமங்கலம் தாலுகா போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.