பதுங்கு குழியில் தங்கியுள்ள மகனை மீட்க வேண்டும்-கலெக்டரிடம் கோரிக்கை
பதுங்கு குழியில் தங்கியுள்ள மகனை மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.இவருடைய மகன் ஜெய்ஹரிஹரன் உக்ரைனில் கார்க்யூ என்ற இடத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில் ஆங்காங்கே குண்டு மழை பெய்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதுங்கு குழியில் உள்ள ஜெய் ஹரிஹரன் உள்ளிட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து அவர் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- உக்ரைன் நாட்டில் கடந்த 2 நாட்களாக போர் நடைபெ்றறு வருவதால் அங்குள்ள பதுங்கு குழியில் எனது மகன் அச்சத்துடன் இருந்து வருகிறார். எனவே என்னுடைய மகனை இந்தியாவிற்கு அழைத்துவர உதவி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.