தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-26 18:44 GMT
திருச்சி
குடிநீர் தொட்டியை சரிசெய்ய கோரிக்கை
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் கண்ணனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு ௨ட்பட்ட  கோட்டப்பாளையம் கிராமம் அருந்ததியா் தெருவில்  கால்வாய் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும், கால்வாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோ௧ன்ராஐ். கோட்டப்பாளையம், திருச்சி.

சொகுசு பஸ் இயக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 20 ஆண்டுகளாக அரசு விரைவு சாய்தள சொகுசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக அந்த சொகுசு பஸ் இயக்கப்படாமல் சாதாரண பஸ்சே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்று வருகின்றனர். இதனால் சென்னைக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள், முதியோர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உடனடியாக அரசு விரைவு சொகுசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.

உயர்மின் கோபுரத்தை சரிசெய்ய வேண்டும்
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி பஸ் நிலையத்தில் உயர் மின் கோபுரம் ஒன்று உள்ளது. அந்த கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்மின் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதார்ஷா, கொளக்குடி, திருச்சி.

மேலும் செய்திகள்