முதுகுளத்தூரில் அரசு பஸ்களை இயக்காமல் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம்

கண்டக்டரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி முதுகுளத்தூரில் அரசு பஸ்களை இயக்காமல் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-02-26 18:36 GMT
முதுகுளத்தூர்
கண்டக்டரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி முதுகுளத்தூரில் அரசு பஸ்களை இயக்காமல் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
கண்டக்டர் மீது தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கண்டக்டராக முத்துக்குமார் இருந்தார். அப்போது பஸ்சில் பயணித்த ஒருவர், பஸ் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து கண்டக்டர் முத்துக்குமார், பஸ்சின் உள்ளே வருமாறு அவரை கூறினார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்,  கண்டக்டர் முத்துக்குமாரை கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர் பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை இயக்காமல் அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தி அரை மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுகுளத்தூர் போலீசார் டிரைவர், கண்டக்டர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு பஸ் டிரைவரை தாக்கியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் தங்களுடைய காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர்.
இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  டிரைவர், கண்டக்டர்களின் திடீர் போராட்டம் காரணமாக பல்வேறு கிராமங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் செய்திகள்