2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திருப்புவனத்தில் 2 பேருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

Update: 2022-02-26 18:26 GMT
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மஞ்சள்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கரந்தமலை, ராமமூர்த்தி. இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு திருப்புவனம் தெப்பக்குளம் மைதானம் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சிலர், இவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்