நன்னிலம், பிப்.27-
வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது35). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வினோத்திடம் கேட்டார். அப்போது வினோத் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.