கேபிள் டி.வி. ஆபரேட்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

கேபிள் டி.வி. ஆபரேட்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது;

Update: 2022-02-26 17:53 GMT
எருமப்பட்டி:
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள மகாதேவி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சபாபதி மகன் ராஜா (வயது 35). இவர் பவித்திரம் புதூர், நல்லப்பநாயக்கன்பட்டி, வேலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்து வருகிறார். 
இந்த நிலையில் ராஜா நேற்று காலை கேபிள் பணம் வசூல் செய்வதற்காக பவித்திரம் புதூர் வழியாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பவித்திரம் புதூர் தெற்கு வீதியை சேர்ந்த நல்லதம்பி மகன் ராஜ்குமார் (23) என்பவர் மோட்டார்சைக்கிளை மறித்தார். பின்னர் கேபிள் ஆபரேட்டர் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் தான் வைத்திருந்த கத்தியால் ராஜாவை கீறினார். இதில் காயம் அடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்