நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இளையான்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுபாலை, கோட்டையூரில் கட்சி கொடியேற்றும் விழாவும், பெரும்பச்சேரி கிராம ஊராட்சியில் பொதுமக்களுக்கு வேட்டி -சேலை மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி காளிமுத்து, செயலாளர் தாமஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி முருகன், இளைஞரணி ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜமாத் தலைவர் நாடா அன்வர், கூட்டுறவு சங்கத்தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட நெசவாளர் அணி சாரதி என்ற சாருஹாசன், ஒன்றிய கழக நிர்வாகிகள் கருணாகரன், ராஜபாண்டி, மலை மேகு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. நோட்டு-புத்தகங்களை வழங்கி பேசினார்.