ஆற்றில் மூழ்கி டீ மாஸ்டர் சாவு

ஆற்றில் மூழ்கி டீ மாஸ்டர் உயிரிழந்தார்.

Update: 2022-02-26 17:10 GMT
கரூர்
கரூர்
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 27). இவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்று பகுதியில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்த கோபால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்