மத்தூர் அருகே நிலத்தகராறில் கணவன் மனைவிக்கு கத்திக்குத்து

மத்தூர் அருகே நிலத்தகராறில் கணவன் மனைவிக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-02-26 16:43 GMT
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்காரப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவரது மகன் பிரபு (34). முருகனின் தம்பிகள் ராமச்சந்திரன் (43), லட்சுமணன் (40). அண்ணன்-தம்பி இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.  கடந்த 25-ந் தேதி ஏற்பட்ட தகராறில் முருகன் அவரது மனைவி குப்பம்மாள் ஆகியோரை ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோர் கத்தியால் குத்தினார்கள். இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்