கர்நாடகா, ஆந்திராவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

கர்நாடகா ஆந்திராவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-26 16:43 GMT
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேப்பனப்பள்ளி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 30 மூட்டைகளில், 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சிம்பனகல்லு பகுதியை சேர்ந்த பக்ருதீன் (வயது 23) என்பதும், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்., ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து டிரைவர் பக்ருதீனை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு  வேன், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்