விஷ வண்டுகள் கடித்து 20 பேர் காயம்

வேளாங்கண்ணி அருகே விஷ வண்டுகள் கடித்து 20 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-26 16:32 GMT
வேளாங்கண்ணி:
 வேளாங்கண்ணி அருகே வடுகச்சேரி வடக்கு தெருவில் உள்ள மயான சாலை அமைக்கும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்  நடைபெற்று வந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த வேப்ப மரத்தை தொழிலாளர்கள் வெட்டிய போது அதில்  கூடுகட்டியிருந்த  விஷ வண்டுகள் தொழிலாளர்களை கடித்தது. இதில் 13 பெண்கள் உள்பட 20 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு வடுகச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்