பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச்சந்தை வியாபாரிகள்
நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை வாரச்சந்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.;
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பேரூராட்சியில் இருந்து ஏலம் எடுத்தவர்கள் மூட்டைக்கு ரூ.10 வசூல் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் கேட்டனர்.
இந்தநிலையில் நேற்று காய்கறிகளை கொண்டு வந்த வியாபாரிகளிடம் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் கேட்டனர். இதனால் வியாபாரிகளுக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.